ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 29  லால்குடி அருகே கோமா குடி கிராமத்தில் உள்ள மாதா கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமியின் மகன் நேசன் (வயது 15). இவர் லால் குடி காட்டூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடு முறை நாள் என்பதால் நேசன் மற்றும் அவருடன் பள்ளியில் பயிலும் ரியாஸ், சந்தோஷ், விஷ்ணு, ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் வெள்ளனூர் அருகே உள்ள முத்துக்குளத்தி ஏரிக்கு சென்று குளித்தனர். ஆழமான பகுதியில் குளித்த போது நேசன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களை அப்பகுதி மக் கள் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார், நேச நேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால் குடி அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது குறித்து நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை விசாரணை ஏற்படுத்தியுள்ளது.

பைக்குகள் மோதல் ஒருவர் உயிரிழப்பு

புத்தாநத்தம் அருகே குருமலைப்பட்டியை சேர்ந்தவர் மணி (34). இவர் மோட்டார் சைக்கிளில் மணியங்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந் தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மணி, சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் வழக் பத குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்

திருச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவிநகர் அருகே சென்றபோது, அந்த பஸ்சின் பின்னால் வந்த கார் மீது அதற்கு பின்னால் வந்த பால் வேன் திடீரென மோதியது. கார் முன்னே சென்ற இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பஸ்சின் பின்புறத்தில் மோதியது. இதில் 3 வாகனங்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.  ஆனால் அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்ட தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் திருவெறும்பூர் செல்லும் மார்க்கத்தில் சோழ கம்பட்டி /ரெயில் நிலையத்திற்கு இடையே திருநெடுங்குளம் அருகே உள்ள தண்டாவளத் தில் நேற்று காலை சுமார் 60 /வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அந்த வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர்யார்? என்பது குறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.