ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் -திட்ட துவக்க விழா

0 189
Stalin trichy visit

திருச்சி, ஜுலை 4  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் -திட்ட துவக்க விழா.இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர் தேசிங்கு ராஜா வரவேற்று பேசினார் .வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முகம் தலைமை வகித்தார். மக்களின் நலமும், நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகிறது. உடல் நலம் பேண ஊட்டச்சத்து மிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாததாகும். காய்கறிகள், பழங்கள்,பயறு வகைகள் ஆகிய விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துபாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புரதச்சத்து மிக்க பயறு வகை பயிர்களான மரத்து வரை காராமணி, அவரை ஆகியவற்றின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும், இத்திட்டம் வழிவகை செய்கிறது.
ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைத்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டு தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை,கீரை வகைகள் அடங்கிய விதை தொகுப்பு, விரைவில் பலன் அளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழ செடிகள் தொகுப்பு இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அபிராமி காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கம், நமது பகுதியில் நிலங்களுக்கு உகந்த பழப்பயிர்கள், பந்தல் காய்கறி சாகுபடி, சரிவிகித உணவு பற்றி கூறினார். பேரூராட்சித் தலைவர் சிவசண்முகம் பயறு விதை தொகுப்பு, காய்கறிகள் விதைத்தொகுப்பு, பப்பாளி,கொய்யா, எலுமிச்சை பழக்கன்று தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊட்டச்சத்து மிக்க உணவினை பற்றி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் தோட்டக்கலை அலுவலர் திருமதி. அனிதா நன்றியுரை கூறினார், உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.