பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே ராட்சத குழாய்கள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

0 10
Stalin trichy visit
திருச்சி, ஜூன் 29 திருச்சி  கீழ பஞ்சப்பூர்பகுதியில் மாநகராட்சிசார்பில் ரூ.234 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பாதாள சாக்கடை கழிவுநீரை கொண்டு வருவதற்காக பிரதான குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கப் பட்டு வருகின்றன. பஞ்சப்பூர் சுடுகாடு அருகே 8 பாலித்தின் குழாய் கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று மதியம் மர்மநபர்கள் அந்த குழாய்களுக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவி அனைத்து குழாய்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர். ஆனாலும், குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பஞ்சப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.