தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேட்டை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

0 242
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  முசிறி அருகே தொட்டியத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நடைபெற்ற வைப்பு தொகை, நகைஅடகு கையாடல் முறைகேட்டை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் வைப்புத்தொகை மற்றும் நகைஅடகு ஆகியவற்றில் கையாடல் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும் திருச்சி புறநகர் வடக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை தொட்டியம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளருமான என்.ஆர்.சிவபதி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, அண்ணாவி, பூனாட்சி முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, செல்வராசு உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

அப்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தொட்டியம் கிளையில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கையும், முறைகேட்டை கண்டித்தும் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் அதிமுகவினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா மற்றும் ஐஜேகே கட்சியினர் கலந்து கொண்டனர். தொட்டியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.