வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – மக்கள் நடமாட தடை!
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 53rd BN, ITB Police Force பயிற்சியாளர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால்,

அது சமயம் மேற்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதால் அந்த இடத்தில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும் மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சித் தளத்தில் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.