கஞ்சா, பாலியல் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஜூலை 14 கஞ்சா, பாலியல் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சிமாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜிநகர், காந்தி நகரைச் சேர்ந்த குணா (29) என்பவரை கடந்த 20.06.2025-ம் தேதி கைது செய்து திருவரம்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 159/25 U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act -ன் படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 24/25, U/s 5(m), 5(n), 5(1), 5(j)(ii) r/w 6(1) of POCSO Act & 351(2) BNS -ன் வழக்கில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புத்தனாம்பட்டி, பொன்விழா நகரைச்சேர்ந்த சிவக்குமார் (39) என்பவரை கடந்த 03.07.2025-ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான குணா மற்றும் சிவக்குமார் ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்டஆட்சியரால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 62 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.