மதுக்கடை ஊழியர் மீது தாக்குதல்

0 13
Stalin trichy visit

திருச்சி மே 11 திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா மசூதி பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்அலி (வயது 29). இவர் குப்பங்குளத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் ஓசியில் மது பாட்டில்கள் மற்றும் பணம் கேட்டுள்ளார். இதற்கு சாதிக் அலி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்க முயன்றார். மேலும் அங்கு நின்ற முத்து என்பவரையும் தாக்க முயன்றார். பின்னர் அவர் அங்கிருந்த மதுபாட்டிகளை உடைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சாதிக் அலி தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குப்பங்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.