மனமகிழ்மன்றம் என்ற பெயரில் திறக்கப்பட்ட மதுபான பார்களை மூட வேண்டும்: த.மா.க. விவசாய அணி ஆட்சியரிடம் மனு

0 182
Stalin trichy visit

திருச்சி, மே 11  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அறிவிப்பு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய சங்கம் சார்பில் செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு வழங்கினர்.

அம்மனுவில் தமிழக மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய தலைமையில் பதவியேற்ற நிலையில் தற்போதைய அரசுக்கும் துணை நிற்கும் ஜோசப் விஜய் அரசு சார்ந்த அதிகாரிகளுக்கும் த.மா.க விவசாய அணி சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி ஊழலற்ற தூய்மையான நேர்மையான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மக்கள் குறைகள் தாமதம் இன்றி செயல்பட வாழ்த்துக்கள்.

சென்ற ஆட்சியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்படும் மதுபான பார்களை உடனடியாக மூட வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மூலம் கமிஷன் அடிப்படையில் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். நீர்நிலைகள் தூர்வாரும் பணியை வேளாண் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்கள் மூலம் நீர்வளத்துறை அதிகாரிகள் முன் நின்று தூர்வார வேண்டும்,

திருச்சி மாவட்டம் முழுமைக்கும் வெற்றிலை சாகுபடி கணக்கீடு செய்து உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் 27 மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி மாவட்டத்தில் காவிரியில் இருந்து நீர் பெறப்படுவதால் திருச்சி விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆண்டு பயிர்கள் அழியும் தருவாயில் உள்ளது. ஆகையால் மேட்டூரில் கூடுதல் நீர் திறந்து திருச்சி விவசாயிகளை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.