வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

0 12
Stalin trichy visit

திருச்சி மே 11திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43) .இவர் சம்பவத்தன்று அரியமங்கலம் திடீர்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கார்த்திகேயனை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் பணம் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அவர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தஞ்சை மாவட்டம் பாரி காலனியை சேர்ந்த கமலேஷ் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 400 மற்றும் ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.