திருச்சி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் செந்திவேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் நான் எனது சொந்த காரணங்களுக்காக எனது பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். தொடர்ந்து மாவட்ட தலைவர் பதவியில் செயல்பட முடியாததால் எனது ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.