உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : மேயர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 15 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாநகராட்சி மேயர் அன்பழகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.