திருவானைக்காவல் பகுதியில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வழக்கில் : 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

0 12
Stalin trichy visit

திருச்சி, மே 11 திருவானைக்காவல் கீழகொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார், அதனை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருவரங்கம் போலீசாரத்துக்கு உட்பட்ட பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளதாக வழக்கு இருக்கிறதா என்று விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் திருவனைக்காவல் பகுதியை சேர்ந்த வினோத் குமார் வயது 35 என்ற வாலிபர் காணாமல் போனது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் கூறப்பட்டுள்ளது என தெரிய வந்தது இதையடுத்து போலீசார் வினோத் குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்.மேலும் போலீசார் கண்டெடுத்த எலும்புக்கூட்டை வைத்து ஆய்வு நடத்தி இறந்த நபர் வினோத் குமார் என்பதே உறுதிப்படுத்தினரர்கள்.

பின்னர் தனிப்படை போலீசார் வினோத் குமார் இறந்தது எப்படி அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணையை முடக்கிவிட்டனர் விசாரணையில் அவரை யாரோ பெட்ரோல் ஊற்றி கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது இதையடுத்து வினோத்குமார் காணாமல் போன நாள் என்று எங்கு இருந்தார் என்று போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருவனைக்காவல் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த பொழுது அவருடன் ஆறு வாலிபர்கள் பேசிக்கொண்டு சென்றது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வினோத்குமார் உடன் சென்ற ஆறு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில்  சற்று மனநிலை சரியில்லாத வினோத்குமாருக்கு நிரந்தர வேலை ஏதும் இல்லாத ஊரை சுற்றி வந்து உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர், குடிப் போதையில் தகராறு செய்து வினோத் குமாரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை அடித்து உதைத்து கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வினோத்குமார் மயக்க மடைந்து விட்டார். பின்னர்  அவரை அந்த வாலிபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பியுள்ளனர்என தெரிய வந்தது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதர், ராஜ்குமார் (எ) ராகுல், கருணா(எ) கருணாகரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு இரண்டு சிறுவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர் மேலும் நான்கு வாலிபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.