பொன்னணியாறு அணையை கலெக்டர் சிவராசு ஆய்வு

0 485
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னணியாறு அணை உள்ளது. 51 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் சமீபத்தில் பெய்த மழையில் ஒரு நாளில் மட்டும் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து சுமார் 29 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி அணையை திருச்சி கலெக்டர் சிவராசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அணையின் உதவி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இதேபோல் வருகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த பொன்னணியாறு அணை என்பது நீர்ப்பிடிப்பு பகுதி கரூர் மாவட்டத்திலும் பாசன வசதி திருச்சி மாவட்டத்திலும் உள்ளது. அணை நிரம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பல மழை பெய்தும் அணை இதுவரை நிரம்பிடவில்லை. இதுமட்டுமின்றி அணையில் சுமார் 10 அடிக்கு மேல் சேறும் சகதியுமாக தான் உள்ளது. இதனால் 29 அடி நீர்மட்டம் இருந்தாலும் நீர் இருப்பு குறைவாகத்தான் இருக்கும். அணைக்கு நீர் வரும் பாதை முறையாக இல்லாததால் அணை நிரம்பாத நிலை உள்ளது. கடும் மழை வந்த போதிலும் கூட பொன்னணியாறு அணை நிரம்பாத நிலையே நீடிக்கின்றது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கலெக்டரை பொன்னணியாறு அணை பாசப்பகுதி விவசாய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிற் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் காவேரி பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைக்கும் காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தை விரைந்து செயல்படுத்தி கொண்டு வருவதுடன் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள புதர்களை அகற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.