மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி:  லால்குடி மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 29  திருச்சி மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் ஐ மேக்ஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட அளவிலான 9-வது சதுரங்க போட்டி 27 ந்தேதி சனிக்கிழமை குளித்தலையில் உள்ள சித்தார்த் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டி நான்கு பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கைலாஷ் நகரைச் சேர்ந்த சிறுமி வி. நேகாஸ்ரீ யூ 9(U9) பிரிவில் திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மூன்றாம் பரிசினை பெற்றார். இவர் லால்குடியில் உள்ள சாய் வித்யாலயா சி. பி. எஸ். சி பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அனைத்து வகுப்பிலும் கல்வியில் சிறந்த மாணவியாக இருந்து வருகிறார். இளம் வயதிலேயே கல்வி மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது பெற்றோர் முனைவர். இரா. வினோத் மற்றும்  வி. பிரியா ஆகியோர் அவரின் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நேகாஸ்ரீ சதுரங்கத்தில் தனி சிறப்பினை காட்டி மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளையும், கேடயங்களையும் பெற்றுள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டு பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கடந்த வருடம் தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான வளரும் சாதனையாளர் விருது 2025 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் ஐ மேக்ஸ் செஸ் அகாடமி தலைவர் புகழேந்தி, இணை செயலாளர் பிரசன்ணா மற்றும் தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.

Leave A Reply

Your email address will not be published.