பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டரிடம் பணப்பை அபேஸ்

0 109
Stalin trichy visit

திருச்சி ஜூலை 24  புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் கலிங்கராயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தனகுமார் (வயது 22). திருச்சி – புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர். இவர் பஸ்ஸில் பணியின் போது தனது கைப்பையை வைத்திருந்தார். பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்ததும் கைப்பையை பஸ்ஸில் சைடு கண்ணாடி அருகில் வைத்து விட்டு அலுவலகத்திற்கு கையெழுத்து போடச் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது கைப்பையை காணவில்லை. உடனே இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கைப்பையில் 43,875 ரூபாய் மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள், டி.சி, மார்க் சீட், ஏ.டிஎ.ம் கார்டு ஆகியவை இருந்தது. இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.