தள்ளுவண்டியில் மதுவிற்பனை செய்த 2 பேர் கைது

0 343
Stalin trichy visit

திருச்சி ஆக. 1  திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பட்டப்பகலில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது புள்ளம்பாடி வாய்க்கால் பகுதியில் ராபர்ட், முத்தமிழ்செல்வன் ஆகியோர் தள்ளு வண்டியில் சட்டத்திற்கு விரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. பின்னர்  அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.