பொன்மலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி ஆக. 1 திருச்சி பொன்மலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் 13 வது கிராஸ் தெருவில் தனி படையுடன் சென்றனர்.அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர்.நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 38)
அரியமங்கலம் பகுதியை சேர்ந்த நிக்சன்,மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 44) கணபதி நகர் ஜெயஸ்ரீ (வயது 21) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அரியமங்கலம் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த பாட்ஷா (வயது 24) ஆசை முத்து (வயது 26) ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.