ஆர்.பி.எப். அனைத்து கோட்டங்களுக்கிடையே கால்பந்தாட்டப் போட்டி தொடக்கம்
திருச்சி, ஆக.4 தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி பொன்மலை ரயில்வே மைதானத்தில் 4-8-25 முதல் 6 -8-25 வரை நடைபெறுகிறது.
இதில் திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள் பங்கேற்கிறார்கள்.
அதன் முதலாவது போட்டி துவக்க விழாவானது இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது.
விழாவில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு பிரசாந்த் யாதவ் ஐ ஆர் பி எஃப் எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.
முதலாவது போட்டியில் திருச்சி கோட்ட அணியும் மற்றும் திருவனந்தபுரம் கோட்டம் அணிகள் விளையாடி அதில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அணியினர் இரண்டுக்கு ஒன்று கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றனர்.