தனியார் மயமாக்குவதைக் கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0 3,710
Stalin trichy visit

திருச்சி, ஆக.11  மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருச்சியில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று ஒன்பது சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சாலை ரோட்டில் உள்ள ஐடிபிஐ வங்கிக்கு முன்பு ஐ.டி.பி.ஐ வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர்.

அப்போது பொதுத்துறை நிறுவனமான வங்கிகளை ஏற்கனவே 50 சதவீத பங்குகளை எல்ஐசிக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து பொதுத்துறையில் இயங்கி வரும் வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்வதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.