தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய கூட்டம்

0 223
Stalin trichy visit

திருச்சி, ஆக.13  தூய்மை பணியாளர்கள் நல வாரிய கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கனிமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் பேசிய வாரிய தலைவர் ஆறுச்சாமி, என்னுடைய தாத்தா செருப்பு தைக்கும் தொழிலாளி, என் தந்தை தோட்டி வேலை செய்தவர் என்னை வாரிய தலைவராக தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தூய்மை பணியாளர் பணி மகத்தான பணி. எங்களுக்காக உழைப்பவர்கள் நீங்கள். என்னை தோட்டி மகன் என எள்ளி நகையாடுவார்கள். ஆனால் அனைவருக்கு தூய்மை பணியாளர் என பெயர் கொடுத்தவர் கலைஞர்.

நலவாரியத்தை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள யாரும் கண்டு கொள்ளவில்லை. 2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின் தான் பல்வேறு நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ 15 கோடி ஒதுக்கீடு செய்தவர் முதல்வர் ஸ்டாலின். 

 நீங்கள் செய்த தொழில் இத்தோடு போகட்டும் உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். படித்தால் தான் சமுதாயம் முன்னேறும். கல்விக்காக பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். வெளி நாடு சென்று படிக்கும் தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கு ரூ.20 லட்சம் தந்துள்ளார். அதை 35 லட்சமாக உயர்த்த வேண்டும் என உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.  திருச்சி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கூட்டம் நடத்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

மலக்குழிகளை சுத்தம் செய்ய ரோபோட் இயந்திரங்கள் சோதனை  முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திற்கும் வழங்கப்படும்  அனைத்து தூய்மை பணியாளர்களும் முக கவசம், கையூறை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.