அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி ஆக 13 திருச்சிக்கு வருகிற23ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வதை குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்தில்லைநகர் 7வது கிராஸ் சாலையில் உள்ள மாநகர், மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெ பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், நிர்வாகிகள் ஐயப்பன், ராஜசேகரன், ஜாக்குலீன், வனிதா, பத்மநாதன்,கேசி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், ரோஜர் ,வாசுதேவன், ஏர்போர்ட் விஜி ,பூபதி கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி, மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன்,கலீலுள் ரகுமான் சகாபுதீன், அப்பாஸ் ,ஞானசேகர்,பகுதி செயலாளர்கள் பூபதி, நாகநாதர் பாண்டி, எம் ஆர் ஆர்முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன்,ஏர்போர்ட் விஜி , புத்தூர் ராஜேந்திரன் கலைவாணன், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், நாட்ஸ் சொக்கலிங்கம், வர்த்தக பிரிவு ஆடிட்டர் ரவி, வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார், முல்லை சுரேஷ், முத்துமாரி, பாலக்கரை சதர், பேராசிரியர் தமிழரசன், நிர்வாகிகள் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.