பைக்கில் அட்ராசிட்டி: கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. அறிவுரை

0 202
Stalin trichy visit

திருச்சி, ஆக.15  திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிவேகமாகவும் இரு சக்கர வாகனங்களை இயக்கிய வந்த 3 நபர்கள் காவல்துறை வாகனத்தை கண்டதும் அதிவேகமாக கடக்க முயன்றபோது கொள்ளிடம் காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்,  நேரில் அழைத்து அதிவேகமாக செல்வதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் இழப்புகள் குறித்து எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.