ஆம்னி பஸ் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி
திருச்சி ஆக 15 திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் மேகுடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 49. ) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது நெல் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர் இன்று காலை பணி முடிந்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது
திருச்சி பஞ்சப்பூர் பஸ் முனையம் அருகே வந்த போது திருச்சியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மைக்கேல் ராஜ் ஓட்டை வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மைக்கேல் ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதமாக பலியானார். இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.