போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது

0 326
Stalin trichy visit

திருச்சி ஆக16 – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மலேசியா செல்லும் பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 47) என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரி சோதனை செய்தபோது அது போலியானவை என தெரிய வந்தது .
இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி அருள்ஜோதி துரைப்பாண்டி மீது ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.