போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைது

0 344
Stalin trichy visit

திருச்சி ஆக16 – திருச்சி தேவதானபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையில் போலீசார் தேவதான பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு கிடமாக அங்கு மூன்று வாலிபர்கள் நின்று கொண்டுஇருந்தனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள், விசாரணையில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 24) தேவதானபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 18) சின்ன கடை வீதி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பது தெரிய வந்தது.மேலும் இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர்கள் போதை மாத்திரை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து
கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து
அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகள்,இரு
சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.