செருப்பு வாங்குவது போல் நடித்து ரூ.50 ஆயிரம் திருட்டு : சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பு
திருச்சி, ஆக.21 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மை வி கே சி என்னும் பிரபல காலனி கடையை அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் உமர் பாருக் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த கடையில் பேண்ட் சட்டையில் வந்த டிப் டாப் ஆசாமி காலனி வாங்குவது போல் வந்து காலணிகளை பார்த்துக் கொண்டிருப்பது போல் நடித்து கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த கல்லாவில் வைத்திருந்த 50,000 பணத்தை லாவகமாக எடுத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கடைப்பணியாளர் உரிமையாளர் உமர் பார்க்குக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த உரிமையாளர் அங்கு வைத்திருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்ததுடன் இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சிசி டிவி காட்சிகளை ஆராய்ந்து பின்பு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதேபோல் கடந்த 19ஆம் தேதி அன்று அதன் அருகே உள்ள கைலாஷ் நகர் பகுதியில் பால்வியாபாரியின் வீட்டிற் குள் புகுந்து தூங்கிகொண் டி ருந்த பெண்ணிடம் இரண்டரை பவுன் தாலி செயின் பறித்து சென்ற டவுசர் கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர் இதுபோல் திருவெறும்பூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.