ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலி
திருச்சி, ஆக.21 திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமத்தில் உள்ள மாங்குளம் ஏரியில் ஆடு ஒன்று ஏரிக்குள் சென்ற போது மீட்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா செட்டிக்குளம் உடையநாதபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் 52 வயதான பூச்சிதேவர்.இவர் கூலிக்கு குரும்பாடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது அங்குள்ள மாங்குளம் ஏரிக்குள் ஆடு ஒன்று சென்று தண்ணீரில் தத்தளித்துள்ளது.இதைக் கவனித்த பூச்சி தேவர் ஆட்டை மீட்க ஏரிக்குள் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் இந்த புள்ளம்பாடி தேனிப்பு நிலைய அலுவலர் பொறுப்பு செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் பாரதி, சிவகுமார் வீரர்கள் மணிவண்ணன், அமுதகுமார், மணிகண்டன், தரணிதரன், வெங்கடேசன், சுரேந்தர், பாலசுப்பிரமணி, வெங்கடேசன், முகமது சமீர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஏரியில் மூழ்கி மாயமான பூச்சித்தேவரை சுமார் 3 மணி நேர தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்டு கல்லக்குடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கல்லக்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர் பின்னர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.