ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த பக்தரின் செல்போனை பறிக்க முயன்றவர் கைது
திருச்சி ஆக.21 திருச்சி மாவட்டம் லால்குடி கூகூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று தனது நண்பருடன் திருவரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் அமர்ந்திருந்த போது மர்ம ஆசாமி ஒருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார் சுதாரித்துக் கொண்ட அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வடபோகி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42 )என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் வசம் இருந்து இரண்டு செல்போன்களை மீட்டனர் .