முதல்வர் குறித்து விமர்சனம்: த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
திருச்சி, ஆக.22 முதல்வரை விமர்சனம் செய்த த.வெ.க. தலைவர் விஜய்யின் தராதரம் அவ்வளவுதான் என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்தார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற த.வெ.க. மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய் முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் இன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற தனியார் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். இந்த விழாவுக்கு பின் அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும். த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரே அங்கிள் என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பதிலளித்த பொழுது..அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை பெரிய கட்சியின் தலைவரை 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் சொல்லுவது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்.
நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்று மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்க எது வேணாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது என பதிலளித்தார்.