வெல்டிங் செய்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு கீழத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கண்ணன் ( 45 ) அதே பகுதி சேர்ந்த தினேஷ் என்பவர் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக மேற் கூரை அமைப்பதற்கு வெல்டிங் வேலை செய்துள்ளார்.
சற்று முன்பு வெல்டிங் அடித்த போது எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர் கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தொட்டியம் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்து இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தொட்டியம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது