ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் மீது தாக்குதல் : எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.25 திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார் அதற்கு முன்னதாக அதிமுக தொண்டர்கள் கூடியிருந்த பகுதியின் வழியாக சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய இருந்த பகுதியில் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் வேன் தாக்கப்பட்டது .அப்போது ஆத்தூர் ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவரை மீட்பதற்காக ஆம்புலன்ஸ் வேன் சென்றது என தகவல் பரவியது. ஊடகங்களில் இது குறித்த செய்தியும் ஒளிபரப்பானது. இந்நிலையில் ஊடகத்தினர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு வந்திருந்த நபர் மயங்கி விழுந்துள்ளதாகவும் அவரை காப்பாற்ற வருமாறு போன் கால் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் கூட்டத்தில் இருந்தவர் மயங்கி விழுந்ததாக 108க்கு போன் செய்த நபர் குறித்தும் அந்த தகவல் உண்மைதானா என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த தகவல் பொய்யாக இருக்கும் பட்சத்தில் தவறான தகவல் கொடுத்தமைக்காக போலீசார் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிய வருகிறது.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியாகி போராட்டத்தை அறிவித்துள்ளது மேலும் இந்த விஷயத்தை சூடு பிடிக்க செய்யும் விதமாக அமைந்துள்ளது. சங்கத்தின் மாநில செயலாளர் இருளாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
அயராது மக்கள் சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அ இ அ தி மு க பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 18/8/25 அன்று வேலூர் மாவட்டத்தில் சாலையில் பொதுக்கூட்ட பிரச்சாரத்தின் போது சாலையில் நோயாளியை ஏற்றுவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கொலை மிரட்டல் விடுத்தார், மற்றும் அங்கு கூடி இருந்த கட்சிக்காரர்கள் ஓட்டுநரையும் மற்றும் ஆம்புலன்ஸ்சையும் தாக்கினார்கள்..
தொடர்ந்து இனிவரும் நாட்களில் தமிழகத்தில் எனது பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸை ஒட்டி வரும் டிரைவர் அதே ஆம்புலன்ஸ்சில் நோயாளியாக செல்ல வேண்டி வரும் என்று மிரட்டினார்.
மிரட்டியதின் தொடர்ச்சியாக நேற்று 24/8/25 திருச்சி மாவட்டம் துறையூர் நகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அஇஅதிமுக கட்சிக்காரர் மயங்கி விழுந்ததாக 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது,கட்சிக்காரர்கள் அழைப்பின் பெயரில் துறையூர் பயர் ஸ்டேஷனில் உள்ள 108 ஆம்புலன்ஸ் (TN 20G4254) மயங்கி விழுந்தவரை (Fainting)காப்பதற்கு 108-ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லும் போது (ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்தில் இருந்து சம்பவம் நடந்த இடத்திற்கான தூரம் 500மீட்டர் தான் )
108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்தவர் விரைவாக வாருங்கள் நோயாளி சுயநிலையில் இல்லாமல் மிகவும் கவலைகிடமாக உள்ளார் என மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து கொண்டு இருந்தனர்,
500 மீட்டர் தூரத்தை கடக்கும் பொழுது இடையில் ஆம்புலன்ஸ்சை மறித்து அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் 108-ஆம்புலன்ஸை கைகளால் குத்தி ஆம்புலன்ஸ்சை சேதப்படுத்தி உள்ளார்கள் ,மற்றும் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுநரையும் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர் கர்ப்பமாக இருந்தும் மூர்க்கமாக அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் தாக்கி உள்ளனர், இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதை அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொமுச வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறை உடனடியாக தாக்கியவர்கள் மீதும் அதை தூண்டும் விதமாக பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தாக்கியவர்களை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொமுச சங்க தலைமையில் அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நாளை (26/8/25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும்.
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்குவோம் என தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , தொமுசபேரவை செயற்குழு உறுப்பினருமான
இருளாண்டி தெரிவித்துள்ளார்.