அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அடையாளம் தெரியாத இளைஞர் மீட்பு

0 191
Stalin trichy visit

திருச்சி ஆக25 – திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.