அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 215
Stalin trichy visit

திருச்சி, ஆக.26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று சென்னையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சி மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, குழந்தைகளுடன் உணவருந்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்புக்கு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.