இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் என்பது முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 16
Stalin trichy visit

திருச்சி, ஆக.3  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பாக உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் துணை சபாநாயகர் ரவிசங்கர் உள்ளிட்ட திருச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில்…

தமிழக முதல்வரை இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களும் பாராட்டக்கூடிய வகையில் சிறந்த ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்

மக்களோடு முழு ஆதரவோடு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது பெரும்பான்மையோடு இந்த ஆட்சியை ஆதரித்து வாக்களிக்காதவர்கள் கூட மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு கர்நாடக முதல்வர் பாராட்டு ஒரு உதாரணம்..

முதல்வர் தனிமையில் இருக்கிறாரா அல்லது யார் தனிமையில் இருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் மைக்கை நீட்டி கேட்டால் தெரியும்

சட்டமன்றத்திற்கு உள்ளே இருந்து பேசி கொண்டிருந்தவர் இன்று வீட்டிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறார் ஆகையால் யார் தனிமைப்படுத்தி இருக்கிறார் என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.  மேகதாது விவகாரத்தில் எதையும் பேசி பேசி தான் செய்ய வேண்டும் என்பது இல்லை செயலில் அனைத்தையும் எங்கள் முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.

செயல் மூலமாக அனைத்தையும் செய்து நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார்.

சில கோவில்களில் ஒரு சிலர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம் விரைவில் திருக்கோவில்களில் அனைத்தும் சரி செய்யப்படும்…

யார் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்…

சீமான் வெறுப்பு அரசியலை விதைக்கிறார் பயிற்சி செய்கிறோம் பயிற்சி செய்கிறோம் என்று தொடர்ந்து பதினைந்து வருடமாக பயிற்சி மேட்டுமே செய்து கொண்டே இருக்கிறார்..

வெறுப்பு அரசியலை விட்டு விட்டு வெற்றி பெறுவதற்காக பேசினால் உள்ளாட்சி தேர்தலில் ஒன்று இரண்டு இடங்களில் வெல்வதற்கான வாய்ப்பு கூட கிடைக்கும் அதை அவர் முயற்சி செய்யட்டும்…

ஓடி ஒளியவில்லை என்று சொல்லும் செந்தில் பாலாஜி எவ்வளவு நாட்கள் எங்கு சென்றார் ஏன் தலைமறைவாக இருந்தார் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டியதுதானே அதை விட்டுவிட்டு ஏதாவது ஒன்றை பேச வேண்டியது..

தப்பு இல்லை என்றால் வெளிப்படையாக வெளியே வந்து பேச வேண்டியதுதானே.

எங்கள் தலைவர் சொன்னது போல் நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் ஊழல் செய்தவர்களை விடவும் மாட்டோம்…

இந்து சமய அறநிலையத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை?

கடந்த காலங்களில் கோவில் சொத்துக்கள் என்னென்ன ஊழல்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை விடலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் விரைவில் அது குறித்து தெரிவிப்போம்.

இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் என்பது முற்றிலும் ஒழிக்கப்படும்.

கோவில் சொத்துக்களை மீட்க விரைவில் குழு அமைப்பு முறையாக விசாரணை செய்து அனைத்தையும் மீட்டெடுப்போம்.

Leave A Reply

Your email address will not be published.