விமான நிலைய சரக்கு போக்குவரத்து ஊழியர் மாயம்

0 248
Stalin trichy visit

திருச்சி ஆக 27  திண்டுக்கல் மாவட்டம் புதிலிப்பை, சின்னக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது33. ) இவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன் மனைவியுடன் திருச்சி காமராஜ் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார். சமீபத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ் கடந்த 24ந்தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் .

வீடு வாங்கித் தருவதாக 17 லட்சம் மோசடி:
திருச்சி காட்டூர் கணேஷ் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரர் தாமோதரன் (வயது 39) திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் வேலு சித்தர். இவர் மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் யோகேஸ்வரனுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் அவரிடம் திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் ஒரு நிலம் விலைக்கு வருவதாகவும் அங்கு யோகேஸ்வரன் வீடு கட்டி வாழ்ந்தால் அவரது வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய யோகேஸ்வரன் அவரிடம் ரூபாய் 17 லட்சத்தி 90 ஆயிரத்தை கொடுத்துள்ளார் பின்னர் வேலு அவருக்கு நிலத்தையும் வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வேலு மற்றும் அவரது உறவினர் ஹரிஷ்மா (வயது 26 1ஆகியோர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.