குடியரசுத் தலைவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சாமி தரிசனம் : பக்தர்களுக்கு தடை

0 287
Stalin trichy visit

திருச்சி, செப்.3- திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சாமி தரிசனம் செய்கிறார்.

இந்திய  குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென் னைக்கு வந்த அவர், நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை கிண் டியில் உள்ள கவர்னர் மாளி
கையில் தங்கினார். இன்று காலை சென்னையில் இருந்து.  தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக் குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.  அங்கு நடைபெ றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி திருவரங்கத்துக்கு வரும் அவர், காரில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப டுகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையத்துக்கு வரும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப் பட்டு செல்கிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருவரங்கம் பஞ்சக்கரையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட் டுள்ளது. ஜனாதிபதியின் திருச்சி வருகையையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், திருவரங்கம் ரெங்கநாதர்
கோவில் பஞ்சகரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகியவற்றுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் திருவரங்கம் கோவிலில் ஜனாதிபதி நடந்து செல்லும் பாதையில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் எஸ்.பி.ஜி. குழுவினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய் யப்பட்டு, விமான நிலையத் திற்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள், பயணச்சீட்டு உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்ட பின்பே முனை
யத்திற்குள் அனுமதிக்கப்படு கின்றனர். முன்னதாக நேற்று மாலை முதல் ஜனாதிபதி பயணம் செய்யும் பாதையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப் பட்டது.

பக்தர்களுக்கு தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருவரங்கம் ரெங்கநாதர் கோவி லில் சாமிதரிசனம் செய்கிறார். இதையொட்டி பாதுகாப்பு கருதியும், முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள இருப்பதாலும் இன்று மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.