டெல்டா பகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடந்தது

0 314
Stalin trichy visit

திருச்சி செப் 3  திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என்.நேரு தலைமையில் டெல்டா பகுதி உள்ள தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
ரகுபதி, சிவசங்கர், மெய்ய நாதன் கோவி செழியன், சி.வி கணேசன் ,டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன்,டெல்டா பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவரங்கம், லால்குடி, திருவெறும்பூர், முசிறி, மணப்பாறை, துறையூர், மண்ணச்சநல்லூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம், திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட 41 தொகுதிகளை சேர்த்த மாவட்ட செயலாளர்கள்,
மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு மேற்கண்ட 41 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும்,வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்தும்,செல்வாக்கு குறைந்துள்ள தொகுதிகளை சரி செய்வது குறித்து அமைச்சர் கே என் நேரு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றுஅறிவுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.