திருச்சி அருகே மதிமுக மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

0 273
Stalin trichy visit

திருச்சி செப் 3 –மறுமலர்ச்சி திமுகவினர் சார்பில் வருகிற செப் 15ந்தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டினை, திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில் நடைபெற உள்ளது.

கடந்த1995 ம் ஆண்டு திருச்சியில் நடத்திய முதல் மாநில மாநாட்டிற்கு இணையாக, முப்பது வருடங்களுக்குப் பின்பு அதே திருச்சியில் 2025-ஆம் வருடம் எழுச்சியுடன் மாநாடு நடத்திட மதிமுகவினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.
இந்த மாநாட்டுக்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. அந்தப் பணிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து இன்று பார்வையிட்டனர்.
மாநாடு மேடை, முகப்பு, 65 அடி உயரத்தில் தலைவர் வைகோ ஏற்றப்போகும் கொடி மேடை, பெரியார் – அண்ணா சிலை அமைவிடம், தொண்டர் அணி அணிவகுப்பு நடைபெறும் இடம் என அனைத்தையும் பொதுச் செயலாளர் வைகோவிடம் மாநாட்டு அமைப்பினர் காட்டி விளக்கினார்கள்.
மாநாட்டில் அண்ணாவின் புகைப்படக் கண்காட்சி அமைப்பது குறித்தும், அதற்குரிய இடத்தையும் முறைப்படுத்திட மாநாட்டு அமைப்பினரிடம் வைகோ அறிவுறுத்தினார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்கள் மற்றும் கட்சியினருக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் போன்ற ஏற்பாடுகள் குறித்த விபரங்களையும்வைகோ கேட்டறிந்தார்.

மேலும், மாநாட்டு தொண்டர் படையினர் அணியவேண்டிய பனியனை வைகோ முன்னிலையில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி அறிமுகப்படுத்தி, தொண்டர் அணி ஆலோசகர் பாஸ்கரசேதுபதியிடம் அணியச் செய்தார்.  அப்போது, குவிந்திருந்த தொண்டர்கள் அந்த பனியனில் பொறிக்கப்பட்டிருந்த அணிதிரள்வோம். ஆர்ப்பரிப்போம். அங்கீகாரம் பெறுவோம். என்ற வாசகங்களைப் படித்து, மிகுந்த ஆரவாரத்துடன் முழக்கம் எழுப்பினார்கள். அவர்களுடன் இணைந்து பொதுச் செயலாளர்
வைகோ எழுப்பிய முழக்கங்களைப் பார்த்து மதிமுக நிர்வாகிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மாநாடு குறித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கூறும்பொழுது
திருச்சி மாநாடு பணிகள் தொடங்கியதில் இருந்து, நாம் திட்டமிடும் பணிகளும், தலைவர் வைகோ வின் ஆர்வமும், நாடு முழுவதும் நமது கட்சி நிர்வாகிகள் காட்டி வரும் அக்கறையும் மறுமலர்ச்சி திமுக மீண்டும் புதிய அத்தியாயத்தில் பலப்படும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை கலியமூர்த்தி, பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், அரியலூர் இராமநாதன், மதுரை முனியசாமி, சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், கழககுமார், மாநில விவசாய அணிச்செயலாளர் வாரணவாசி இராசேந்திரன் மற்றும் திரளான கட்சியினர் உடன் இருந்தனர்.திருச்சியில் மாநாடு நடைபெறுவதால் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.