வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்

0 299
Stalin trichy visit

திருச்சி செப் 3  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் துறை அலுவலர்களின் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ள வருவாய் துறை பிரிவின் பணியாற்றும் பணியாளர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வாரத்திற்கு இருமுறை மட்டுமே நடத்த வேண்டும், அரசு துறையில் கருணை அடிப்படையில் பணி நிமித்ததற்கான உச்சவரம்பு 5 சதவீதம் இருந்து 25 சதவீதம் உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டி,
கார்த்திகேயன் சங்கரநாராயணன், உலகமணி சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.போராட்டத்தில் வருவாய் துறை மாவட்ட செயலாளர் பொன். மாடசாமி விளக்க உரை ஆற்றினார்.முடிவில் ராமலட்சுமி நன்றி கூறினார்.இந்த திடீர் போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.