கல்லூரிகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி 

0 207
Stalin trichy visit

திருச்சி செப் 3 – திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான டேபிள்டென்னிஸ் போட்டி  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  நடைபெற்றது.

மாணவர்கள் பிரிவில் 7 கல்லூரி அணிகளும், மாணவியர்கள் பிரிவில் 11 கல்லூரி அணிகளும் பங்கேற்றன. இதில் மாணவர்களுக்கு நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில்  திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 3-1என்ற செட் கணக்கில் வென்றும், மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியை 3-0 என்ற  செட் கணக்கில் வென்றும்  முதலிடம் பிடித்து திருச்சி ,  பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் அனியாக திகழ்ந்தது.
மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் பிரிவில்  புதுகை மாமன்னர் கல்லூரி, புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று  மூன்றாவது இடம் பிடித்தது. மாணவியர்கள் பிரிவில் , ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரியை 3-1 கவர்என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜமால் முகமது  கல்லூரி பொருளாளர் எம். ஜெ. ஜமால் முகமது, சிறப்பு விருந்தினராக . கலந்து கொண்டு முதல் நான்கு இடங்களை  பிடித்த  கல்லூரி அணிகளுக்கு செயலாளர் மற்றும் தாளாளர், ஏ. கே.. காஜா நஜீமுதீன்
முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம்,  உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா, துணை முதல்வர், ஜாகிர் உசைன், பாரதிதாசன் பல்கலைக்கழக
உடற்கல்விதுறை மற்றும் விளையாட்டு போட்டி செயலாளர் பேராசிரியர் ஏ. மெஹபூப் ஜான், ஆகியோர் முன்னிலையில் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.