வடக்கு மாவட்ட திமுக சார்பில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா

0 311
Stalin trichy visit

முசிறி கைகாட்டியில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில்
வ.உ.சிதம்பரனார் 154வது  பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில்திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்  வ.உ.சிதம்பரனார் 154 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து
வ.உ.சி.யின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் முசிறி ராமச்சந்திரன், துறையூர் வீரபத்திரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நகர செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். திரளான கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முசிறி நகர ஒன்றிய வ உ சி பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.