சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திருச்சி, செப்.5 தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் சிவாலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோன்று தா.பேட்டையில் ஏகாம்பரேஸ்வரர் உடனமர் காமாட்சி அம்மன், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமான கருணாகரவள்ளி உடனுறை கைலாசநாதர், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.