வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வி.சி.க.வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 174
Stalin trichy visit

திருச்சி, செப்.9  ஆதிதிராவிடர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு வழங்கப்பட்டது.

திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் குரு அன்புச்செல்வன் தலைமையில் நேற்று  திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் திருச்சி மாவட்டம், லால்குடி புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு அடுத்து கிழரசூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் இன மக்கள் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌

இதில் 1980 ஆம் ஆண்டு 60ஸகுடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
300 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு 80வருடமாக தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்து
போராடி வருகின்றனர் .

எனவே, விரைவில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், லால்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் மரியகமல், சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் கமல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் திருமாஇராணி, ஒன்றிய செயலாளர்கள் இரா.ரவீந்திரன், தாமஸ்விக்டர், ஒன்றிய துணை செயலாளர் நீலகண்டன் மற்றும் கீழஅரசூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.