2500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

0 12
Stalin trichy visit

திருச்சி, செப். 10  திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்  உத்தரவின் படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக துவாக்குடி டோல் பிளாசா அருகே  வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்தTN68C7161 TATA ACE என்ற வாகனத்தில் 2500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, நடு காவிரி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணிகண்டன் மற்றும் காளிதாஸ் மகன் லோகநாதன் ஆகியோர் மேற்படி வாகனத்தில் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக கடத்திய குற்றத்திற்காக அரிசி மற்றும் வாகனத்தை கைப்பற்றி திருச்சி குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறையில், வழக்கு பதிவு செய்து, மேற்படி எதிரிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, திருச்சி மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் ரேஷன் அரிசி கடந்தலில் ஈடுப்படுவோர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.