அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி : முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்
திருச்சி, செப். 10 திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை முன்னாள் அமைச்சர் வளர்மதி வழங்கினார்:-
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற நோக்கில் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக குடும்ப விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்
அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு விழா தொடங்கியது.
நிகழ்ச்சியில். அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்துரை வழங்கினார்கள். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் விளக்க உரை ஆற்றினார்.
மதியம் அறுசுவை விருந்துக்கு பிறகு மூத்த நிர்வாகிகள் கௌரவபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மகளிர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கருத்துரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர், கவுன்சிலர் அரவிந்தன், கவுன்சிலர் அம்பிகாபதி சுரேஷ்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் வனிதா, ஜெயஸ்ரீ மற்றும் பகுதி கழக செயலாளர்கள், அணி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் கௌரவப்படுத்தப்பட்டன.
முடிவில் எடமலைப்பட்டி புதூர் பகுதி செயலாளர் வசந்தம் செல்வமணி நன்றி கூறினரர். நிகழ்ச்சியில் மாநகர், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.