அடிப்படை வசதி கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

0 184
Stalin trichy visit

திருச்சி செப் 10  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ திருவரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு திருவரங்கம் பகுதி துணைத்தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, கவுன்சிலர் சுரேஷ், ஏ ஐ எஸ் எப் மாநில தலைவர் இப்ராஹிம், மாநில துணைத்தலைவர் செல்வகுமார், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் ராமராஜ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், திருவரங்கம் பகுதி செயலாளர் பார்வதி, மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி ,மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.