திருச்சியில் நாளை மனிதநேய மக்கள் கட்சி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சி செப்.11- திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில், ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவேண்டும்,
வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்தும், மதுரை எழுச்சிப் பேரணி மாநாடு தீர்மானங்களை விளக்கியும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
மமக துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமை தாங்குகிறார்.
மேற்கு மாவட்ட தலைவர்,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பைஸ் அகமது ,கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக தலைவர் பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பொது செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ , ஊடகவியலாளர் செந்தில் வேல்,
தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ்கான், தமுமுக மகளீர் பேரவை
மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இப் பொதுகூட்டத்தில் சமூக நல ஆர்வலர்கள், ஜமாத் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.