திருச்சி கே.கே.நகர் பகுதியில் தீ விபத்து
திருச்சி, செப். 11- திருச்சி கே.கே.நகர் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( 56). இவர் அப்பகுதியில் ஆட்டோ மொபைல் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் நேற்று நள்ளிரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 5 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயிலிருந்து எரிந்து நாசமாகின. மேலும் அருகிலுள்ள 2 கடைகளுக்கும் தீ பரவியது. உடனடியாக, தீயணைப்பு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், 2 கார்கள், மற்றும் 5 டூவீலர்கள் முழுமையாக எரிந்தது. மேலும் அருகில் உள்ள இரண்டு கடைகளும் தீப்பற்றியதில் மொத்தம் 14 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாய் என கூறப்படுகிறது இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்