ஒட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

0 213
Stalin trichy visit

திருச்சி செப் 15- திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் லோகேஷ் (வயது 22)இவர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது தந்தை ராஜா மகன் லோகேஷிடம் சம்பள பணம் கேட்டுள்ளார்.அதற்கு லோகேஷ் நாளை தருகிறேன் என்று கூறிவிட்டு அவருடைய அறைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் ஆகியும் லோகேஷ் அறை கதவை திறக்கவில்லை.பிறகு அவரது தந்தை ராஜா ஜன்னல் வழியாக பார்த்த பொழுது லோகேஷ் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ராஜா உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய லோகேஷ் உடலை கைப்பற்றி புனித பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.