கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய வாலிபர் : போலீசார் விசாரணை

0 193
Stalin trichy visit

திருச்சி செப் 15- திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய இளம் பெண் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஹரி (வயது 25, என்ற வாலிபர் அவருடன் பழகி வந்தார். இதனால் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது.இந்த காதலுக்கு கல்லூரி மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஹரி கல்லூரி மாணவியை ஏமாற்றி அவரை கர்ப்பம் ஆக்கிவிட்டார்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கல்லூரி மாணவியின் தாய் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையில் கல்லூரி மாணவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி கர்ப்பமாகி 45 நாட்கள் ஆகிறது என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.